இந்த மாதத்தின் பிற்பகுதியில் அபுதாபியில் இடம்பெறவுள்ள பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட் போட்டியில் மத்தியூஸ் பங்கேற்க மாட்டார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன . செவ்வாயன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காயப்பட்ட இவர் , நேற்று புதனன்று ஸ்கான் பரிசோதனை முடிவில் , விளையாட முடியாத நிலையை மருத்துவர் உறுதிப்படுத்தி உள்ளார் . இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்கா குருசிங்காவும் இத் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார் .
தொடர்ந்து கடந்த 12 மாதங்களாக, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் கால் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வருகிறார் . தென் ஆபிரிக்க பயணத்தின்போது , ஜனவரி மாதத்தில் காயப்பட்ட இவர் ஜூன் மாதம் வரை விளையாடவில்லை . கடந்த வருடம் சிம்பவேக்கு எதிரான தொடரிலும், கால் காயம் காரணமாக பங்கேற்கவில்லை .
இதை மனதில் வைத்துக்கொண்டு , சமீப காலங்களில் இவருக்கு அதிக பந்து வீச்சு கொடுக்கப்படவில்லை . அப்படி இருந்தும் , இலங்கை படுதோல்விகளுக்கு பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டு எழ முயற்சிக்கும் போது, சிறந்த வீரரான இவருக்கு மீண்டும் காயம் வந்துள்ளது .2013-14 காலகட்டத்தில் இவர் ஐக்கிய அரபுக் குடியரசில் விளையாடிய சமயம் , டெஸ்ட் தொடரில் 412 ஓட்டங்களை ஆடி எடுத்திருந்தார் .
பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடும் இலங்கை அணி , தனது முதலாவது டெஸ்டை , செப்டெம்பர் 28இல் விளையாடவுள்ளது . இரண்டாவது டெஸ்ட் ஒரு இரவு பகல் ஆட்டமாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.