திறமை இல்லாமல் இல்லை: ஆனால் எங்கள் பிரச்சனை இது தான்..



இலங்கை அணிக்கு நல்ல திறமை இருக்கிறது, ஆனால் நம்பிக்கை குறைவாக இருப்பதே தற்போதைய பிரச்சனையாக உள்ளது என மேத்யூஸ் கூறியுள்ளார்.

இலங்கை அணி தலைவர் பதவியிலிருந்து மேத்யூஸ் கடந்த யூலை மாதம் விலகினார். அந்த அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அது குறித்து மேத்யூஸ் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், எல்லோரையும் விட இலங்கை அணி வீரர்கள் தொடர் தோல்வியால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதே அணியை வைத்து கொண்டு இரு மாதங்களுக்கு முன்னர் நடந்த சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் 322 ஓட்டங்கள் என்ற இலக்கை தொட்டு வெற்றி பெற்றோம்.

எங்களிடம் திறமை இல்லாமல் இல்லை. ஆனால் அணியினரிடம் நம்பிக்கை குறைவாக இருப்பதே தற்போதைய பிரச்சனையாக உள்ளது.

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடிய ஆறு வீரர்கள் காயம் காரணமாக இந்தியாவுடனான தொடரில் விளையாடவில்லை.

இது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தோற்றதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

இலங்கை தொடர் தோல்வியடைந்து வரும் நிலையில், ஒரே ஒரு வெற்றி தற்போது எங்களுக்கு தேவைப்படுகிறது.

அது மட்டும் கிடைத்தால் நிச்சயம் அணிக்கு பெரிய தன்னம்பிக்கை கிடைக்கும் என மேத்யூஸ் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.