ரோகிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து, 5 குழந்தைகள் பலி




மியான்மரில் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் ரோகிங்கிய முஸ்லீம்கள், அங்கிருந்து வங்காளதேசத்திற்கு படகு மூலம் அகதிகளாக செல்கின்றனர். இவ்வாறு வங்காளதேசத்திற்கு சென்ற அகதிகளின் சில படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


இதில் ஐந்து குழந்தைகள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நப் நதியில் படகு கவிழ்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. 


கடந்த ஆகஸ்ட் 25 முதல் மியான்மரின் ராக்கின் மாகாணத்தில் உள்ள ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்ததில் இருந்து எல்லையில் உள்ள நப் நதியை கடக்க முற்பட்ட பலர் பலியாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. 


மிகவும் ஆக்ரோஷமான கடல் நீர் உள்ள பகுதியான நப் நதியின் முகவாயில் சிறிய மீன் பிடி படகு மூலம் மக்கள் செல்ல முற்படுவதால் இது ஆபத்தான பயணமாக அமைந்துள்ளது. 


நப் நதி, வங்காளதேசத்தையும் மியானரில் உள்ள ராக்கைன் மாகாணத்தையும் பிரிக்கும் வகையில் அமைதுள்ளது. தற்போது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் வங்காளதேசத்துக்கு சென்றுள்ளதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.