பள்ளி மாணவி கை, கால் கட்டப்பட்டு கழுத்து அறுத்துக் கொலை..




பள்ளி மாணவி கை, கால் கட்டப்பட்டு கழுத்து அறுத்துக் கொலை.. தர்மபுரியில் பயங்கரம்.

தர்மபுரி மாவட்டம், மாட்லாம்பட்டி அடுத்துள்ள கெங்குசெட்டிப்பட்டி உத்தண்டி கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவன் இவர் அரசு பஸ் டிரைவர், இவருடைய மனைவி சாந்தி, இவர்களுக்கு மோகன் என்ற மகனும், வனிஷா (14) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், வனிஷா மாட்லாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.


அவரது தந்தை வழக்கம் போல பணிக்கு சென்றுள்ளார், அவரது அம்மா தோட்டத்துக்கு சென்றார். சகோதரர் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக சென்றிந்தார். வீட்டில் மாணவி வனிஷா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

விநாயகர் சிலை ஊர்வலம் முடிந்த பின்னர் மாலையில் சகோதரர் மோகன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, தங்கை கை, கால் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மோப்ப நாய் உதவியுடன் தடவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். இதனையடுத்து மாணவி வனிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முதற்கட்டமாக அதே கிராமத்தை சேர்ந்த ரவி என்ற இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.