உயர்தரப் பரீட்சையை முடித்துவிட்டு கடலில் மூழ்கி உயிரிழந்த 6 மாணவர்கள் இவர்கள்தான்.

யாழ். மண்டைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் உயிர் தப்பியுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி சென்ற போது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.

நந்தன் ரஜீவன் (உரும்பிராய் ) 18 ,
நாகசிலோஜன் சின்னத்தம்பி (உரும்பிராய்) 17 ,
தனுரதன் (கொக்குவில்) 20 ,
பிரவீன் (நல்லூர்) 20 ,
தினேஷ் (உரும்பிராய்) 17 ,
தனுசன் (சண்டிலிப்பாய்) 18
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.