உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள அதிசயக் குழந்தை.




முழு சூரிய கிரகணத்தின் போது பிறந்த தமது குழந்தைக்கு வித்தியாசமாக பெயரிட்டு பெற்றோர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.


அமெரிக்காவின் 14 மாகாணங்களில் 99 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் நடைபெற்ற முழு சூரிய கிரகணத்தை அனைவரும் பார்த்து களிப்படைந்தனர்.


இந்நிலையில் அந்நாட்டின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கிரீன்வில்லே மருத்துவமனையில் ப்ரீடம் யுபங்ஸ் என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சூரிய கிரகணம் நடைபெற்ற நேரத்தில் அவர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.


சூரிய கிரகணத்தின் போது பிறந்த குழந்தை என்பதால், கிரகணத்தை ஆங்கிலத்தில் குறிக்கும் எக்லிப்ஸ் என்ற வார்த்தையையே குழந்தைக்கு பெயராக வைத்து பெற்றோர்கள் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.


குழந்தைக்கு நிறத்தை குறிக்கும் வார்த்தையான வயலட் என்ற பெயரை வைக்கவே முடிவெடுத்திருந்ததாவும், சூரிய கிரகணத்தின் போது பிறந்ததால் பெயரை மாற்ற நினைத்ததாகவும் ப்ரீடம் யுபங்ஸ் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.


சூரிய கிரகணத்தின் போது பிறந்து அதே வார்த்தையை பெயராக பெற்றுள்ளதால், செல்லக் குழந்தை எக்லிப்ஸ்சுக்கு மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு உடை ஒன்றை பரிசாக அளித்து உற்சாகப்படுத்தியுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.