9 வயது மகன் கண் முன்னே பெற்ற தாயின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த கும்பல். வேடிக்கை பார்த்த மக்கள்.


எந்த ஒரு விசாரனையும் இன்றி. இவள் தவறு செய்தாலா இல்லையா என்று கூட தெரியாமல் ஒரு பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஜார்கண்ட மாநிலத்தில் சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் ராதாநகர் என்னும் இடத்தில் நடந்துள்ளது.

அந்த ஊரைச்சேர்ந்த 9 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் பிச்சை எடுத்து வந்துள்ளனர்.


இந்நிலையில் அந்த மாவட்டத்தில் பல பெண்களின் தலைமுடியை மர்மமாக வெட்டி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைத்தொடர்நது அங்குள்ள மக்கள் இந்த நான்கு பேரையும் தாக்க தொடங்கியுள்ளனர்.

இவர்கள் அவர்களுடைய பையில் தலைமுடி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த கும்பலில் உள்ள ஒரு பெண் நாங்கள் பிச்சைக்காரர்கள் என்று கதறியுள்ளார்.

அதையும் பொருட்படுத்தாமல் அந்த கும்பல் அவர்களை தாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணின் தலையில் பெரிய கல்லை போட்டு தாக்கியுள்ளனர்.

சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிர் இழந்துள்ளார். அந்த பெண்ணுடைய 9 வயது மகனையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.