மேற்கிந்திய தீவில் அதிரடி காட்டிய சங்ககாரா: அசால்ட்டாக வெற்றி பெற்ற ஜமைக்கா



மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் சங்ககாராவின் அதிரடி அரைசதத்தால், ஜமைக்கா டல்லாவாஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மேற்கிந்திய தீவில் கரீபியன் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய 23-வது ஆட்டத்தில் வாட்சன் தலைமையிலான St Lucia Stars அணியும், சங்ககாரா தலைமையிலான Jamaica Tallawahs அணியும் மோதின.


முதலில் துடுப்பெடுத்தாடிய St Lucia Stars அணி நிர்ணயிக்கப்பட்ட 20-வது ஓவரில் 8-விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் குவித்தது.


அந்தணி சார்பில் ஷேன் வாட்சன் அரைசதம் கடந்து 80 ஓட்டங்களும், சார்லஸ் 20 ஓட்டங்களும் எடுத்தனர், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.


ஜமைக்கா அணி சார்பில் சாண்டோகி மற்றும் மதுரின் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜமைக்கா அணிக்கு துவக்க வீரர்கள் சிம்மன்ஸ் 11 மற்றும் பிலிப்ஸ் 21 ஓட்டங்களிலும் வெளியேறினர்.


அடுத்து வந்த அணியின் தலைவர் சங்ககாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருக்கு இணையாக மெக்கர்டியும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார்.

இந்த ஜோடியின் ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை மெல்ல மெல்ல எகிறத் துவங்கிய போது, மெக்கர்டின் 36 ஓட்டங்களில் வெளியேற, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


அதன் பின் ஒன் மேன் ஆர்மியாக சங்ககாரா லூசியா பந்து வீச்சாளர்களை திணறடித்தார். இதனால் சற்று கடினம் தான் என்று எதிர்பார்க்கப்பட்ட இலக்கை சங்ககாரா அசால்ட்டாக எட்டி பிடிக்க வைத்தார்.

சங்ககாராவின் அதிரடியால் ஜமைக்கா அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய சங்ககாரா 45 பந்தில் 74 ஓட்டங்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர் அடங்கும். ஆட்ட நாயகன் விருதை சங்ககாரா தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஜமைக்கா அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.