தேர்தல் திருத்தத்தில் மலையகம் புறக்கணிக்கப்பட்டால் எதிர்ப்போம்: இராதாகிருஸ்ணன்


நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்க இருக்கும் சட்டம் மலைய மக்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால் அதற்கான எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டம் நுவரெலியா கல்வி இராஜாங்க அமைச்சரின் காரியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

தொடர்ந்து இந்த தீர்மானம் தொடர்பில் அங்கு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர், “புதிய முறையிலான உள்ளூராட்சி தேர்தல் திருத்தத்தின் ஊடாக சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக மலையக மக்களுக்கு வட்டாரத் தேர்தல் முறைமை பாதிக்காமல் இருக்க வேண்டும்.

இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வைப் பெற வேண்டுமானால் சிறுபான்மை கட்சிகளான மலைய கட்சிகள்¸ முஸ்லிம் கட்சிகள் உட்பட ஏனைய சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

இதற்கு மலைய மக்கள் முன்னணி¸ தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன ஆயத்தமாக உள்ளன. நாங்கள் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக இருந்தாலும் எம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உரிய இடத்தில் எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

இதனையே எமது கட்சியான மலையக மக்கள் முன்னணி தனது மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானித்தது” என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.