
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகளை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு முன்னெடுக்கத் அரசியலமைப்பு உருவாக்க சபை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம், 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் கூடி முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஒன்றிணைந்த எதிரணியும், தமது யோசனைகளை அடுத்தவாரம் வழிநடத்தல் குழுவுக்கு சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாகவும், அதன்பின்னர் அரசமைப்பு குறித்த சட்ட வரைவை நிறைவுசெய்து நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி, மக்கள் கருத்துக்கணிப்பினூடாக அதை அங்கீகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.