உபுல் தரங்கவுக்கு இரு போட்டிகளில் விளையாட தடை



இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் உபுல் தரங்கவுக்கு இரு போட்டிகளில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று (24) இடம்பெற்ற இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி குறித்த நேரத்திற்கு பந்து வீசி முடிக்காது, அதிக நேரம் எடுத்துக் கொண்டமை காரணமாகவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைவர் எனும் ரீதியில் உபுல் தரங்கவுக்கு, இப்போட்டித் தடை விதிக்கப்பட்டதுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் இரு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு அவர் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சுற்றுலா இந்தியா அணியுடனான தொடரின், எதிர்வரும் ஞாயிறு (27) இடம்பெறவுள்ள மூன்றாவது போட்டி (பல்லேகல), மற்றும் வியாழன் (31) இடம்பெறவுள்ள நான்காவது போட்டிகளில் (ஆர். பிரேமதாச) அவரால் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


இத்தொடரின் ஐந்தாவது ஒரு நாள் போட்டி (ஆர். பிரேமதாச) எதிர்வரும் செப்டெம்பர் 03 ஆம் திகதியும், ஒரே ஒரு போட்டியாக இடம்பெறவுள்ள ரி20 போட்டி செப்டெம்பர் 06 ஆம் திகதியும் (ஆர். பிரேமதாச) இடம்பெறவுள்ளன.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று (24) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றதோடு, ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.