இலங்கையில் பாடசாலை மாணவி கொடூரமாக குத்திக் கொலை




இரத்தினபுரி – இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எந்தானை, கொடகும்புர பகுதியில் 19 வயது மாணவி ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தற்போது இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும், பட்டேயாய ஸ்ரீ கொடகும்புர பகுதியைச் சேர்ந்த தீபிகா பிரியதர்ஷனி என்ற மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரை பெல்மதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.