நிட்டம்புவ - கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட தீ பரவலை தொடர்ந்து அங்கு தீப் பற்றி எரிந்த பவுஸரின் சாரதி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கம்பஹா காவற்துறை தெரிவித்துள்ளது.
அவர்கள் கவனக்குறைவுடன் செயற்பட்ட காரணத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற் கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கொழும்பு - கண்டி வீதியின் நிட்டம்புவ கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
எவ்வாறாயினும் , சுமார் 2 மணி நேர போராட்டத்தின் பின்னர் தீப்பரவல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது.
தீயினால் , உயிர்ச் சேதங்கள் எதுவும் பதிவாகாத நிலையில் , எரிபொருள் நிரப்பு நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
எனினும் சேத விபரங்கள் குறித்து இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.