அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஏ.ஆர் முருகதாஸ் Ajith Next Movie. கதை ரெடி.
அஜித்தின் விவேகம் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் நான்கு நாட்களுக்கு மொத்த திரையரங்கிலும் தமிழகம் முழுக்க விவேகம் தான் என்றே கூறலாம்.
எந்த நடிகருக்கு இல்லாத அளவிற்கு ரசிகர்கள் படத்திற்கு ஆர்வம் காட்டினர்.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்தப்படம் யார் இயக்குவார் என்ற பேச்சு தொடங்கிவிட்டது.
ஒரு சில பேட்டிகளில் சிவா, அஜித்துடன் அடுத்தப்படத்துக்கு தயார் என்பது போல் பேசியிருந்தார்.
வெங்கட்பிரபு, ஏ.ஆர். முருகதாஸ், விஷ்ணுவர்தன் போன்ற இயக்குனர்கள் அஜித்தின் அடுத்தப்படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏ.ஆர் முருகதாஸ் ஏற்கனவே அஜித்திற்காக கதையை தயார் செய்து வைத்துள்ளார்.
அந்த கதையிவ் அஜித்தை தவிர வேறு யாரையும் வைத்து இயக்க மாட்டேன் என்று கூறி இருந்தார்.
மேலும் அவர் எப்போது அழைத்தாலும் செல்ல தயாராக இருக்கிறேன் என்று கூறி இருந்தார். அஜித்தும் விவேகம் முடித்து விட்டார்.
ஏ.ஆர்.முருகதாசும் மகேஷ்பாபு நடித்த ஸ்டைபர் படத்தை முடித்து விட்டார். இருவரும் இணைய சரியான நேரம் கூடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றபடி முறைப்படி அஜித் அறிவித்தால் மட்டுமே உண்டு.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.