15 வயது மாணவியின் கையை துண்டாக வெட்டிய நபர்: அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்





இந்தியாவில் பொதுமக்கள் கூடியிருக்கும் சந்தையில் 15 வயது மாணவியின் கை துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Lakhimpur Kheri சந்தையில் Vinod Chaurasia (19) என்ற நபர் 15-வயது மாணவியான Shivani Mishra-யை கத்தியால் வைத்து தாக்கியதால், மாணவியின் கை துண்டான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Shivani Mishra தனது சகோதரரனுடன் அங்குள்ள Lakhimpur Kheri சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்த Vinod Chaurasia அவரிடம் பேச முயற்சித்துள்ளார்.

ஆனால் Shivani Mishra மறுத்தவுடன், கத்தியை வைத்து தாக்கியுள்ளார். இதனால் அப்பெண்ணின் கை துண்டாகியதால் இரத்த வெள்ளத்தில் வலியில் துடித்துள்ளார்.


இதைக் கண்ட் அருகில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்த உடனடியாக அவனை தடுத்து நிறுத்தி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பாதிப்புக்குள்ளான மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் Vinod Chaurasia-வை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பொலிசார் கூறுகையில் ஏன் அவன் மாணவியை தாக்கினான் என்பது தொடர்பான தகவல் சரிவர தெரியவில்லை, மாணவி மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் சிகிச்சை முடிந்து வந்த பின்னர் அவர் அளிக்கும் தகவலுக்கு பின்னரே தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மாணவிக்கு அதிக அளவு இரத்தம் வெளியேறியுள்ளதால், அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் மாணவியை தாக்கிய Vinod Chaurasia அவரை பல மாதங்களாக பின் தொடர்ந்து வந்ததாகவும், கடந்த புதன் கிழமை அவரை சந்தையில் பார்த்ததால், அவரிடம் பேச முயற்சி செய்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததன் காரணமாகவே, ஆத்திரத்தில் Vinod Chaurasia அவரை தாக்கியதாக அங்கிருக்கும் நபர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.