சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷை விட்டு இலங்கை அணிக்கு வருவாரா?



பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தனது ராஜினாமா கடிதத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு (BCB) கையளித்துள்ளார். அவரது ஒப்பந்தக் காலம் 2019ஆம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையிலேயே இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஜுன் மாதம் கிராஹம் போர்ட் ராஜினாமா செய்தது தொடக்கம் இலங்கைஅணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ள நிலையில், ஹதுருசிங்க2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மூன்று வருட காலத்திற்கு இலங்கைதேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவிருப்பதாகநம்பகமான வட்டாரங்கள் மூலம்  தெரியவருகிறது.



இலங்கை அணியின் நிழல் பயிற்சியாளராக செயற்பட்ட ஹதுருசிங்கவை 2010ஆம்ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபை அப்பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து அவர் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்தார்.

தான் ஆடிய காலத்தில் ஒரு நிலையான ஆரம்பத் துப்பாட்ட வீரராக செயற்பட்டஹதுருசிங்க இலங்கைக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 10, 861 முதல்தரஓட்டங்கள் மற்றும் 425 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஹதுருசிங்க அதிகஅனுபவம் கொண்ட முதல்தர கிரிக்கெட் வீரராக இருந்தார்.

கிரஹம் போர்டின் விலகலுக்கு பின், களத்தடுப்பு பயிற்சியாளர் நிக் போதாஸைஇடைக்கால தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் சபை நியமித்தது. அவர்இலங்கை அணியின் ஜிம்பாப்வே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்களில்பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாதத்திற்கு 30,000 டொலர்கள் (4.6 மில்லியன் ரூபாய்) சம்பளத்திற்கு ஹதுருசிங்க இணங்கியதாக க்கு மேலும் தெரியவருகிறது. 

இலங்கை கிரிக்கெட் சபை தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா கடந்த வாரம்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியதாவது,

“நாம் ஒருசில பயிற்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நிக் போதாஸ்உட்பட 3-4 பேர் அடங்குகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் நாம் இந்த நியமனத்தைஉறுதி செய்வோம். அடுத்த ஆண்டு ஜனவரியில் நிரந்த தலைமை பயிற்சியாளர் ஒருவர்இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார். 



ஹதுருசிங்கவின் பயிற்சியின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் பங்களாதேஷ் பெரும்முன்னேற்றம் கண்டது. 2015 உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியபங்களாதேஷ் 2017 சம்பியன்ஸ் கிண்ணத்தின் அரையிறுதி வரை முன்னேற்றம்கண்டது. அதேபோன்று உள்நாட்டில் நடந்த இரு தரப்பு தொடர்களில் பங்களாதேஷ்அணி பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளையும் வீழ்த்தியது.

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தபங்களாதேஷ் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வெளிநாட்டில்இலங்கைக்கு எதிராகவும் இந்த ஆண்டில் முதல் வெற்றியை பெற்றது. 

இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வாரம் மூன்று ஆண்டு காலத்திற்கு துடுப்பாட்டபயிற்சியாளராக திலான் சமரவீரவின் சேவையை பெற்றது. எதிர்வரும் இந்திய சுற்றுப் பயணம் முதல் அவரது ஒப்பந்தம் ஆரம்பமாகிறது. ஹதுருசிங்கவின் பரிந்துரையின்கீழ் சமரவீர 2016 ஆம் ஆண்டு பங்களாதேஷின் துடுப்பாட்ட ஆலோசகராகபணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. 

புதிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும்ஒரு T20 போட்டி என்பவற்றில் ஆடுவதற்கு அடுத்த ஆண்டு பங்களாதேஷ்சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

thepapare

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.