எரிபொருளை விநியோகிக்கும் பணிகளை இன்று பிற்பகலுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவர முடியும் என கனிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
15 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகளவான எரிபொருள் தற்போதையளவில் நாடுமுழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், கொழும்பு மாவட்டத்தின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைத்துள்ளதாகவும், வெளி மாவட்டங்களின் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என்றும் எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பெற்றோல் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவின் அறிக்கை அடுத்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கை கையளிக்கப்பட உள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.