மெடிற்றரேனியன் கடலில் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 764 அகதிகளுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் 23 பேரின் சடலங்களும் இருந்ததாக இத்தாலிய கடலோரக் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மத்திய மெடிற்றரேனியன் கடலில் நேற்று அதிகாலையில் இந்தக் கடினமான மீட்புப்பணி இடம்பெற்றதாக இத்தாலிய கடலோரக் காவல்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆறு மீட்பு நடவடிக்கைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம், 764 குடியேற்றவாசிகள் பாதுகாப்பாக கப்பலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தாலியை நோக்கிச் சென்று கொண்டிருந்த 764 குடியேற்றவாசிகள் இத்தாலிய கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டு, டிசியோற்றி என்ற கப்பலின் மூலம், தென்பகுதி துறைமுகமான ரெக்கியோ கலாப்ரியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
இந்தக் கப்பலில் 8 பேரின் சடலங்களும் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
படகில் இருந்து மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள், சிறிலங்கா, சகாரா, பாகிஸ்தான், சிரியா, ஜோர்தான், ஏமன், மொராக்கோ, நேபாளம், அல்ஜீரியா, எகிப்து, பங்களாதேஷ், லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இத்தாலிய கடலோரக் காவல்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Jaffna Muslim

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.