யாழில் ஹெரோயினுடன் இரு பெண்கள் இரு ஆண் விற்பனையாளர்கள் கைது.



-பாறுக் ஷிஹான்-

மானிப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் இரகசிய பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நால்வர் நேற்று(02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.என்.டி.நாலக்க ஜெயவீர தெரிவித்தார்.

கைதான நால்வரும் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் 26வயதுடைய யுவதிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அறிந்து கொண்ட இரகசிய பொலிஸார் தாமும் ஹெரோயின் வாங்குவது போல் பாசங்கு செய்து சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர்.

அத்துடன் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10கிராம் அளவிளான 20மேற்பட்ட சிறுமுடிச்சுக்களில் சுற்றி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளினை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசியில் இருந்து யார் விற்பனைக்கு வழங்கியிருந்தார்கள் என்பது தொடர்பில் புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுகின்றது


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.