ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டிக்கான இந்திய வீரர்களின் பயிற்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி நாளை முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் துவங்குகிறது.
இந்நிலையில் இன்று முதல் டி-20 போட்டிக்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் அங்கு தொடர் மழை பெய்ததால், இந்திய அணியினரின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இது இந்த பருவகாலத்தில் சகஜம் தான். ஆனால் இதனால் போட்டிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என மைதான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.