சிறுநீரகங்களால் சேவை செய்யும் ஸ்ரீலங்கா மக்கள்; இதயம் குளிர்ந்த வைத்தியர்!



ஸ்ரீலங்காவில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகமான சிறு நீரக தானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டில் சிறுநீரக தானம் 75 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுநீரக மாற்று நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து கருத்துத்தெரிவித்த அவர்,

”இந்த நடப்பாண்டில் 19 சிறுநீரகங்கள் மக்களிடமிருந்து தானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு 6 சீரநீரகங்கள் மட்டுமே தானமாக பெற்றுக்கொள்ளப்பட்டன. பெரும்பாலும் மூளைச்சாவு அடைபவர்களின் உடல்களிலிருந்தே அவர்களின் உறவினர்களது ஒப்புதலுடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.


ஸ்ரீலங்கா மக்கள் முன்னரைப்போலல்லாமல் இப்பொழுதெல்லாம் உடலுறுப்புத் தானத்திற்கு முன்வருகின்றமையானது சிறப்பானதொரு எடுத்துக்காட்டாகும். இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வேரூன்றிவிட்டது என்றே சொல்லமுடியும். இதனால்தான் இந்த ஆண்டு மக்களிடம் அதிகமான சிறு நீரகங்களைப் பெறமுடிந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளதோடு குறித்த சிறு நீரக தானங்களைச் செய்யும் உறவினர்களுக்கு தமது பாராட்டுக்களினையும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.