அமெரிக்காவின் பிரபல தடகள வீரரும் 2004 ம் ஆண்டு 100 M ஒலிம்பிக் சாம்பியனுமான ஜஸ்டின் கால்டின்,இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டிகளில் தங்கம் வென்றவர்.
ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்டையே 100 M ஓட்டப்பந்தயத்தில் வீழ்த்தி, தங்கம் வென்ற கால்டினை IAAF-என்று அழைக்கப்படும் சர்வதேச தடகள வீரர்களுக்கான கூட்டமைப்பு, சிறந்த தடகள வீரர்களுக்கான விருதுகளில் இவரை புறக்கணித்துள்ளது.
இந்த ஆண்டினுடைய சிறந்த தடகள வீரர்களுக்கான விருதுக்குரிய குறும்பட்டியலில் கால்டின் பெயர் இடம்பெறவில்லை.
ஊக்கமருந்து சோசோதனையில் சிக்கி இருதடவைகள் தடைக்குள்ளானமையே அதற்கான காரணம் என்று அறியவருகின்றது.
குறித்த விருது வழங்கல் விழா எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ம் திகதி இடம்பெறவுள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.