புதிய அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதி அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் 2020 வரை மைத்திரி நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக செயற்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர் ஒருவர் சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த நேர்காணலில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புதிய அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும்.
நாடாளுமன்றத்திற்கு கட்டுப்படும், பிரதமரின் ஆலோசனையின் பேரில் செயற்படும் ஜனாதிபதி பதவியே இனிவரும் காலங்களில் நடைமுறையில் இருக்கும்.
மாகாணசபைகளை கலைப்பது உள்ளிட்ட சில விடயங்களில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் தொடர்ந்திருக்கும். பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவற்றை முன்னெடுக்க நேரிடும்.
அதேநேரம் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தாலும் தற்போதைக்கு அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரங்கள் கொஞ்சமும் குறைக்கப்பட மாட்டாது.
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை சகல அதிகாரங்களும் கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அவர் பதவி வகிப்பார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அஹமட் புர்க்கான்

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.