-சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் ஆதார வைத்தியசாலை, ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலைகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் நேற்று (03) நிந்தவூர் நலன்புரிச் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டு, சுகாதார அமைச்சிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட நிந்தவூர் பிரதான வீதியிலுள்ள வைத்தியசாலை சதுக்கத்தில் இடம்பெற்றது.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியேட்சகர் திருமதி.சஹிலா இஸ்ஸதீன், ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலைப் பணிப்பாளர் கே.எல்.நக்பர் ஆகியோர்களின் தலைமைகளில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, புதிய கட்டிடங்களுக்கான அடிக்கற்களை நாட்டி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆரீப் சம்சுதீன், ஏ.எல்.தவம், ஐ.எல்.எம்.மாஹீர், முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.யாக்கூப் ஹஸன், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிந்தவூரிற்கு வருகை தந்த அமைச்சர்கள் அனைவரும் நிந்தவூhப்; பொது மக்களால் மாலை அணிவித்து சிறப்பாக வரவேற்கப்பட்டனர். வானவேடிக்கைகள், பேன்ற் வாத்தியங்கள் முழங்க, பெண்களின் குரவை ஒலிகளுக்கு மத்தியில் பொல்லடி, கண்டியன் டான்ஸ் போன்றவை மூலம் அமைச்சர்கள் திறந்த வாகன ஊர்தி மூலம் நிந்தவூர் பிரதான வீதி வழியே ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலைச் சதுக்கத்தில் பிரதியமைச்சர் பைசால் காசீம் தலைமையில் பொதுக் கூட்டமொன்றும் இடம் பெற்றது. இதில் வைத்தியசாலைக் காணிக் கொள்வனவுக் குழுவிற்குத் தலைமை தாங்கி, பல்வேறு நாடுகளுக்கும் சென்று, பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பணம் திரட்டி, இக்காணியைப் பெற்று, வைத்தியசாலை சதுக்கத்திற்கு அன்பளிப்புச் செய்ததில் தன்னை அர்ப்பணித்த நிந்தவூர் நலன்புரிச் சபைத் தலைவரும், முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான எம்.எச்.யாக்கூப் ஹசன் அவர்களுக்கும், புதிய வைத்தியசாலை அமைப்பதற்குக் கோடிக்கணக்கில் பணம் தருவதற்குச் சம்மதம் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களுக்கும் பிரதியமைச்சர் பைசால் காசீமினாலும், ஊர்ப்பிரமுகர்களாலும் பொன்னாடைகள் போற்றி, நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீரும், பிரதியமைச்சர் பைசால் காசீமும் பொன்னாடைகள் போற்றி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள 28 பாலர் பாடசாலைகளுக்கும் சுத்தமான நீரை வடித்துத்தரும் 'நீர் வடிகள்' பாலர் பாடசாலை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
இதே வேளை ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலைக்கான இணையத்தளமொன்று வைத்தியசாலைப் பணிப்பாளர் கே.எல்.நக்பரின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு பைசால் காசீம் கருத்துத் தெரிவிக்கையில்:- 'கடந்த காலங்களில் பொது பலசேனா போன்ற அமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்ட போது, நமது அமைச்சர்களும், அதிகாரிகளும் பேசமுடியாமல் தவித்த போது மிகவும் தைரியமாகவும், துணிச்சலாகவும் குரல் கொடுத்தவர்தான் இந்த அமைச்சர் ராஜித! இவர்களை நாம் மறக்க முடியாது. அவர்களைப் பாராட்டுவோம்' எனத் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்துத் தெரிவிக்கையில்:-'இன்று இலங்கையில் முஸ்லிம் மக்கள் எந்தத் தயக்கமுமி;றிப் பள்ளிக்குச் சென்று தங்கள் கடமைகளை நிறைவேற்றலாம். அதே போல் ஹறாம், ஹலால் போன்றவற்றைப் பரிசோதித்து, தமது உணவுகளை உட்கொள்ளலாம். தமக்கான உடைகளைத் தைரியமாக அணியலாம். நல்லாட்சியில் எந்தவித இனவிரோதச் செயற்பாடுகளுக்கும் இடங் கிடையாது. மஹிந்தவின் ஆட்சியை விட்டு நான் வெளியேறக் காரணமாக அமைந்ததே இந்த இனவிரோதச் செயற்பாடுகளேயாகும். யார் ஏனைய சமூகங்களைத் துன்புறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்களோ அவர்களை எப்போதும் எதிர்பேன். அதற்குத் தயங்கமாட்டேன்' எனத் தெரிவித்தார்.




















Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.