இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்து சாதித்தது கோஹ்லி படை…!!!






இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்து சாதித்தது கோஹ்லி படை…!!!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 5 ஆவது ஒரு நாள் போட்டி இன்று பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

வழமை போல் ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்த இலங்கை அணி, 2 போட்டிகள் தடை விலகி மீண்டும் அணிக்கு திரும்பிய அணித்தலைவர் தரங்க அதிரடியாக ஆடி 48 ஓட்டங்களை குவித்திருந்தாலும் 10 ஆவது ஓவரில் அவரும் ஆட்டமிழக்க இலங்கை அணி 10 ஒவர்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மத்தியூஸ் மற்றும் திரிமன்னே நிதானமாகவும் விக்கெட் இழப்பை தடுக்கும் வண்ணமாகவும் போட்டியை நகர்த்தி சென்றனர். சிறப்பான இணைப்பாட்டத்தை பகிர்ந்த திரிமன்னே 67 ஓட்டங்களையும் மத்தியூஸ் 55 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

அதன் பின் வழமை போல் வேகமாக விக்கெட்களை இழந்து 238 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இலங்கை அணி. பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு 239 ஓட்டங்கள் என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி பலத்த சிரமத்தை எதிர்கொள்ளாமல் வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி சதமடித்து(30) மீண்டும் ஒரு வெற்றியை இந்திய அணிக்கு தேடிக்கொடுத்தார்.

இவ்வெற்றியின் மூலம் இந்திய அணி 5-0 என இலங்கை அணியை ஒரு நாள் தொடரில் வெள்ளை அடிப்பு செய்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்திருந்த இலங்கை அணி தற்போது ஒரு நாள் தொடரையும் முழுமையாக இழந்துள்ளது.

இத்தொடரில் வெள்ளை அடிப்பு செய்ததன் மூலம் இந்திய அணி இலங்கை அணியை 2 ஆவது முறையாக ஒரு நாள் தொடரில் வெள்ளை அடிப்பு செய்துள்ளது. அத்துடன் இலங்கை அணி 42 ஆண்டுகளில் சொந்த மண்ணில் இவாறானதொரு தொடர் தோல்வியை சந்தித்தமை இதுவே முதல் முறையாகும்.

இப்போட்டியில் தனஞ்செயாவின் விக்கெட்டை ஸ்டம்ப் செய்து வீழ்த்தியதன் மூலம் டோனி ஒரு நாள் கிரிக்கெட்டில் 100 ஆவது ஸ்டம்ப் செய்து சாதித்துள்ளார். இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் சங்கக்கார 99 ஸ்டம்ப்கள் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.