அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6 விக்கட்டுகளை இழந்து நிலையில், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் களத்தில் நின்று துடுப்பெடுத்தாடினர்.
இதன்போது 47வது பந்து ஓவரின் 4வது பந்தினை அவுஸ்திரேலிய அணியின் கால்டர் நெயில் வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட புவனேஷ்வர் குமார் இதனை வேகமாக அடித்து பவுண்டரிக்கு அனுப்ப முற்பட்டார்.
இந்நிலையில் குறித்த பந்தானது நேரடியாக சென்று மறுமுனையில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பாண்டியாவின் காதை பலமாக தாக்க, பாண்டியா நிலைத்தடுமாறி மைதானத்தில் விழுந்தார்.
இதனை பார்த்து உடனடியாக செயற்பட்ட அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், பாண்டியாவிடம் சென்று அவருக்கு உதவினார். அத்துடன் அவருக்கான சிகிச்சைகளை மேற்கொள்ள உடனடியாக மைதானத்துக்கு வெளியிலிருந்த இந்திய அணியின் வைத்தியரையும் அழைத்தார்.
தற்போது ஸ்மித்தின் செயலானது சமுக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.
போட்டி என்ற அடிப்படையில் விராட் கோஹ்லி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஆக்ரோஷமாக விளையாடக்கூடியசர்கள். அதுமாத்திரமின்றி இந்திய அணியுடன் நடைபெறும் போட்டிகளில் ஸ்மித்தின் ஆக்ரோஷத்துக்கு எல்லையிருக்காது.
எனினும் போட்டியை மீறிய மனிதாபிமானமே ஸ்மித்தின் இந்த செயலுக்கு காரணம் என சமுக வலைத்தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.