ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தல தோனி, ஸ்டெம்பிங்கை தவறவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி பெங்களூரில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் பின்ச் இந்தியாவின் பந்துவீச்சை பதம் பார்த்து மளமளவென ரன் குவித்தனர்.
போதாக்குறைக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பட் கீப்பர் தோனி, போட்டியின் 23வது ஓவரில் பின்ச்சை ஸ்டெம்பிங் செய்ய தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார்.
விக்கெட் கீப்பிங்கில் கில்லாடியான தோனி ஸ்டெம்பிங்கை தவறவிட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.