குடு விற்பவர்கள் சிங்களவர்கள் அல்லர், அடிப்பவர்களே அவர்கள்- விஜேதாச ராஜபக்ஷ


இலங்கையில் போதைப் பொருள் கொண்டு வருபவர்களும், விநியோகிப்பவர்களும் சிங்கள பௌத்தர்கள் அல்லவெனவும், அதனைப் பாவிப்பவர்களே சிங்களவர்கள் எனவும் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கவலை வெளியிட்டார்.
பலாங்கொடயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
உலகத்துக்கு போதைப் பொருள் விநியோகம் மேற்கொள்ளும் கேந்திர மையம் இலங்கை என சர்வதேச அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. இந்த நாட்டிலுள்ள அரசியல் வாதிகளுக்கு இந்த அபாயத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியாது. இதனைப் பார்த்துக் கொண்டு இருக்கவும் முடியாது.
ஐந்து வருட ஆட்சிக்கு வந்தவர்கள் எவ்வாறு 99 வருடங்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வது?. எமது எதிர்கால சந்ததியினரை அடமானம் வைக்க அவர்களுக்கு இடமளிக்க  முடியாது. நாம் ஜனநாயகத்தைப் பெறவில்லை. அதன் பெயரில் அதற்குப் பகரமாக வேறு ஒன்றையே பெற்றுள்ளோம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
dailyceylon

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.