காதல் வலையில் பள்ளி மாணவிகள் -ஒரு உண்மை ரிப்போர்ட்



அறிவியல் வளர்ச்சி விண்ணை தொடும் அளவிற்கு வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே .அதிலும் அதிரையில் இணைய தொடர்புள்ள வீடுகளே இருக்க முடியாத அளவிற்கு தொலை தொடர்பில் தஞ்சை சுற்றுவட்ட பகுதியிலேயே முன்னோடியாக அதிரை உள்ளது.


இதனால் நமதூரில் இணைய தொடர்பின் ராஜா வாட்ஸ் ஆப் செயலி மூலம் பள்ளி மாணவிகளை வீழ்த்திடும் ரோமியோக்கள் அதிரையில் அதிகமாக வலம் வருவதே நிதர்சனமா உண்மை ப்குறிப்பாக பள்ளி மாணவிகளில் தோழிகளே ரோமியோக்களுக்கு உதவுவது மிகவும் வேதனை .


அதிலும் வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு தொலைப்பேசியை வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்காமல் பணம் இருக்கிறது என்ற ஒரு எண்ணத்தில் தொலைப்பேசியை வழங்கி விட்டு விபரீதம் ஆகியவுடன் வருத்தம் அடைவதற்கு முன்பு நன்கு சிந்தித்து செயல்படுங்கள் .


இந்த பதிவின் நோக்கம் பெற்றோர்கள் இனிவரும் காலங்களின் பிள்ளைகள் விசயத்தில் உஷாராக இருப்பத்திற்க்காகவே இந்த பதிவு .


சரி விசயத்திற்கு வருகிறோம் .நமது அதிரை எக்ஸ்பிரஸ் நிருபருக்கு வந்த உண்மை தகவல் அடிப்படையில் இந்த பதிவு :


பள்ளி மாணவிகள் வாட்ஸ் ஆப் குழுமத்தில் தம்முடைய எண்னை இணைத்து சக தோழிகள் மத்தியில் அன்றாட நட்பு பரஸ்பரத்தை தொடர்ந்திட புகைப்படங்கள் செய்திகள் போன்றவற்றை பரிமாறி கொண்டு நட்பின் எல்லையில்லா மகிழ்ச்சியை அடைந்து வரும் வேளையில் உறவினர் என்ற முறையில் சில ரோமியோக்கள் உறவு முறையில் இருக்கும் பெண் பிள்ளைகளிடம் சக தோழிகளின் புகைப்படத்தை கேட்பது தொலைபேசியின் எண்ணை பெறுவது போன்ற செயல்களின் ஈடுபட்டு பள்ளி மாணவிகளை காதல் என்ற ஆபாச வலையின் வீழ்த்தும் நிலை தற்போது அதிகரித்து வருகிறது என்பதை நாம் மறுக்கமுடியாது .நாம் மேலே குறிப்பிட்டதை போல்உண்மை நிகழ்வு நமதூரில் நடந்தது .பெண்ணின் நலம் கருதி பெயர் இப்பதிவில் குறிப்பிட வில்லை .


ஒரு பள்ளி மாணவி வாட்ஸ் ஆப் குழுமத்தில் இருந்த சகா தோழியின் எண்ணை உறவு முறை (மட்சான் )நபர் கேட்கிறார் என்று விளையாட்டாக கொடுத்து ரோமியோவின் விருப்பத்தை நிறைவேற்றிய மாணவி தன்னுடைய தோழியின் வாழ்க்கையின் கரும் புள்ளியை தேடி கொடுக்க போகிறோம் என்ற எண்ணம் துளி அளவும் இல்லை என்பதே வேதனை .மேலும் நினைத்ததை சாதித்த ரோமியோ தமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து விட்டது என்ற எண்ணத்தில் பள்ளி மாணவியின் தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை மொழிந்து காதல் வலையில் வீழ்த்தி மாத கணக்கில் காதல் வட்டத்தை பேருக்கி புகைப்படம் பரிமாற்றி கொள்ளும் அளவிற்கு காதல் லீலை தொடர்ந்து நடத்தி வந்தான் ரோமியோ.அதனை தொடர்ந்து சில நாட்கள் போக போக மாணவியின் நடவடிக்கையில் சிறிது மாற்றம் வந்தவுடம் பெற்றோர்கண்காணித்து தொலைப்பேசியை சோதனை செய்த பொழுது காதல் லீலைகள் பெற்றோருக்கு தெரிய வர அதிர்ச்சியை கொடுத்தால் பள்ளி மாணவி பிறகு உறவுகள் சம்பந்த பட்ட ரோமியோவை அழைத்து கொடுக்கவேண்டிய தர்ம அடி விருந்துகளை கொடுத்து காதல் லீலையை முறித்து அனுப்பி வைத்தார்கள் .அதனை தொடர்ந்து ரோமியோவிற்கு உதவி கரம் நீட்டிய தோழிக்கும் சரியான முறையில் பாடம் நடத்தினார்கள் சம்பந்தப்பட்ட உறவினர்கள் . 




தோழியின் தொலைபேசி எண்ணை உறவு முறை நபர் (மட்சான் )னிடம் கொடுத்தால் விபரீதம் நம் தோழிக்கு வரும் என்ற எண்ணம் வேண்டாமா ? சக தோழிக்கு .


வாட்ஸ் ஆப் மூலம் நடப்பு வலையத்தை உருவாக்கும் பெண் பிள்ளைகளே உங்களில் நடவடிக்கைகளை பல ரோமியோக்கள் வேவு பார்க்கிறார்கள் என்று எண்ணம் கொள்ள வேண்டும் .ரோமியோக்களுக்கு உதவுவது உங்களில் சக தோழியாகவும் இருக்கலாம் .ஆகையால் உங்களின் நட்பு பரஸ்பரத்தை நேருக்கு நேர் முறையில் வெளிப்படுத்துங்கள் இது தான் தற்போதைய நிலையில் சிறந்த ஒன்று .


. சிந்தியுங்கள் பெற்றோர்களே உங்களுடைய பிள்ளைகள் நல்ல முறையில் நடந்து கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது .பிள்ளை கேட்கிறாள் நாம் தொலைப்பேசி வாங்கிக்கொடுக்கலாம் என்ற எண்ணம் உள்ளவர்கள் சிந்தியுங்கள் .தொலைப்பேசி வைத்திருக்கும் பெண்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று சொல்லமுடியாது .தொலைபேசியினால் வரும் நல்லதை மட்டும் எடுத்து கொண்டு தீயதை விலக்கி கொள்வது தான் கால சிறந்தது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.