
தீவிர வாத குழுக்களுடன் கட்டார் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய சவூதி தலைமையிலான ஆறு நாடுகள் கட்டாருடனான உறவுகளை முறித்து கொண்ட பின்னர் இராஜதந்திர அளவில் பாரிய இடைவெளி ஒன்று ஏற்பட்டது.
வளைகுடா நாடுகளுக்கிடையே நடந்துள்ள இந்த மோதல் சில மாதமாக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கட்டாரின் மீது தடைகளை ஏற்படுத்திய வளைகுடா நாடுகள் தற்போது சில நல்லெண்ண சமிக்கைகளை வெளியிட தொடங்கியுள்ளன.
இதன் ஒரு படியாக, சவூதி மன்னர் சல்மான் கத்தார் இளவரசர் ஷேக் தமீம் இடையே தொலைபேசி பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலையை தீர்த்து வைக்கும் என கூறப்படுகிறது.
இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மற்ற நாடுகளுடன் உறவை புதுப்பிப்பது குறித்து பேசியிருக்கலாம் என இராஜதந்திர ஆர்வலர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள்.
கட்டருடனான இந்த பிரச்னைக்கு மத்தியஸ்தம் வகிக்க தான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதன் பின்னரே இந்த சுமுகமான தொலைபேசி உரையாடல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
worldtamil
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.