மஹேல ஜயவர்தன நியுசிலாந்து ரக்பி அணியின் ரசிகரானது எவ்வாறு?



மஹேல ஜெயவர்தன நவீன கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர். இலங்கையின் இந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் நியுசிலாந்து ரக்பியின் ( ALL BLACKS) மிக முக்கியமான ரசிகர் என்பது பலருக்கும் தெரியாத விடயம். இது தொடர்பாக நியுசிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.


ரக்பி, இலங்கையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு விளையாட்டாகஇருக்கும் நிலையில் மஹேலவின் ரக்பி மீதான இந்த ஆர்வம் ஒருஆரோக்கியமான விடயமாகும் எனக் குறிப்பிட்ட குறித்த செய்தி நிறுவனம், மஹேல சமூக வலைத்தளங்களில் நியுசிலாந்து ரக்பி அணி பற்றி கருத்துத்தெரிவிப்பது தொடர்பாக ஒரு செவ்வியையும் கண்டது. 2007 கிரிக்கெட்உலகக் கிண்ணத்தில் நியுசிலாந்து அணிக்கெதிராக மஹேல பெற்ற சதம்மூலம் நியுசிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறியமை பற்றி அச்செய்திநிறுவனம் நினைவூட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த செவ்வியின்போது மஹேலவிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் உங்களுக்காக,


மஹேல, இலங்கையில் ரக்பி ஒரு முன்னணி விளையாட்டாக இருப்பதற்கு தேவையான பின்னணி எவ்வாறு உள்ளது?

உண்மையில் இலங்கையில் ரக்பி ஒரு முன்னணி விளையாட்டாக உள்ளதுஎனச் சொன்னால் பலருக்கும் நம்புவது கடினம். ஆனால், இலங்கையில்பாடசாலைகளில் ரக்பி ஒரு மிகப் பிரபலமான விளையாட்டாகும். சிலபாடசாலைகளுக்கிடையிலான ரக்பி போட்டிகளை காண்பதற்கு பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நான் படித்தபாடசாலையும் ரக்பி விளையாட்டில் முன்னணியிலுள்ள ஒருபாடசாலையாகும். எனவே நான் வளர்ந்தது ரக்பியுடன் என சொன்னால் அதுமிகையில்லை. 

எமது உள்ளூர் ரக்பி கழகங்கள் மிகப் பிரபலமானவை. பிஜி, சாமோஆ மற்றும்இங்கிலாந்து போன்ற நாடுகளின் முன்னணி வீரர்கள் எமது அணியைபிரதிநிதித்துவப்படுத்துகின்றமை எமது ரக்பியின் முன்னேற்றத்தினைபறைசாற்றுகின்றன.





நீங்கள் நியுசிலாந்து ரக்பி அணியின் ரசிகரானது எவ்வாறு ? 

ஜோனாஹ் லோமு, க்லென் ஒஸ்போன், கிறிஸ்டியன் குள்ளேன் மற்றும் ஜெப்வில்சன் போன்ற வீரர்களின் காலத்தில் இருந்தே நான் நியுசிலாந்து ரக்பிஅணியின் ரசிகன். அவர்கள் அனைவரும் அற்புதமான வீரர்கள். இலங்கைகிரிக்கெட் அணியின் அநேக வீரர்கள் ரக்பி விளையாட்டில் ஈடுபாடுகொண்டவர்கள்தான். கடந்த கோடை காலத்தில் நான் அவுஸ்திரேலியாவில்விளையாடிக்கொண்டிருந்த போது சுப்பர் ரக்பி தொடரில் க்ருசொடர்ஸ்அணியின் பல போட்டிகளை கண்டு ரசித்துள்ளேன். சொல்லப் போனால்அப்போது எனது ஆதரவு க்ருசொடர்ஸ் அணிக்குத்தான்.
நீங்கள் கோடை காலத்தில் கிரிக்கெட் விளையாடுகிறீர்கள், அப்படியென்றால் உங்களது குளிர் கால தேசிய விளையாட்டு ரக்பி தானா?

துரதிஷ்டவசமாக எமது நாட்டில் குளிர் காலம் என்ற ஒன்று கிடையாது. பொதுவாக எப்போதும் வெப்பமான காலம்தான். எமது நாட்டில் ரக்பி, மழைகாலங்களிலேயே இடம்பெறும். தொடர்ந்து 4 மாதங்களுக்கு இப்போட்டிகள்இடம்பெறும். எமது வீரர்கள் அதிக போட்டி மனப்பான்மையுடைய சிறந்ததிறமையுள்ள வீரர்கள். குறிப்பாக அணிக்கு 7 பேர் கொண்ட போட்டிகளில்ஆசியாவில் நாம் சிறந்த இடத்தில் உள்ளோம். 15 வீரர்கள் அணி அந்தளவுக்குபலம் பொருந்தியவர்களாக இல்லாவிட்டாலும் நாளுக்கு நாள் முன்னேற்றம்காணப்படுகின்றது.

இலங்கையின் சில அணிகள் ஹகா நடனத்தை செய்து காட்டுவதாககேள்விப்பட்டோம்அதனைப் பற்றி ஏதேனும் கூற முடியுமா?
ஆம்நியுசிலாந்து அணியின் சில வீரர்கள் எமது ரக்பி கழகங்கள்சிலவற்றுக்கு பயிற்றுவிப்பாளர்களாக உள்ளனர். அவர்களே ஹகாநடனத்தையும் பயிற்றுவித்துள்ளார்கள்நியுசிலாந்து அணியின் வீரர்களைஎமது வீரர்களுடன் பார்க்கும் போது உண்மையில் பெருமையாக உள்ளது.
இலங்கை ரக்பி அணி சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவுக்குமுன்னேறும் என நம்புகிறீர்களா?
நாம் ஒரு சீரான வளர்ச்சியை கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்எமதுவீரர்கள் 15 பேர் கொண்ட போட்டிகளில் விளையாடுவதற்கு மிகப்பெரியதடை அவர்களின் உடல் தோற்றம்தான்எமது  வீரர்கள் அந்தளவுக்கு பெரியஉடலமைப்பைக் கொண்டவர்களல்லஎமது வீரர்களின் திறன் மற்றும்வேகத்தில் எந்தக் குறைபாடுமில்லை. அனால் உடல் அளவு மற்றும் உடற்பலம்என்பவற்றிலேயே குறைபாடுள்ளது.
எமக்கு மிகச்சிறந்த பல வீரர்கள் கிடைத்தவண்ணம் உள்ளனர்இன்னும் சிலவருடங்களில் எம்மால் முதல் 20 அணிகளுக்கு நெருக்கடி கொடுக்கும்அளவுக்கு முன்னேற முடியும் என்பதுடன் ரக்பி உலகக் கிண்ணம் ஒன்றுக்குதகுதி பெற எம்மால் முடியும் எனவும் நம்புகிறேன்.

thepapare
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.