சமூக ஊடகங்களில் பார்ப்பது முஸ்லிம்கள் பௌத்தர்களின் குழந்தைகளை கொலைசெய்யும் காட்சி





"நீங்கள் சமூக ஊடகங்களில் பார்ப்பது முஸலிம்கள் பௌத்தர்களின் குழந்தைகளை கொலைசெய்யும் காட்சி" என மியன்மார் பௌத்த பிக்கு அசின் விராது தேரர் தன்னிடம் கூறியதாக இந்து சம்மேளன தலைவர் நாரா.அருண்காந்த் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவரது முகநூலில் தகவல் வெளியிட்டுள்ள அவரது ஊடகப்பிரிவு ,


இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்களுக்கும் பர்மாவைச் சேர்ந்த பலமிக்க அமைப்பான 969 அமைப்பின் நிருவுனரும் நண்பருமான அசின் விராது தேருக்கும் இடையே தொலைபேசிமூலம் பேச்சுவார்த்தையொன்று இன்று நடைபெற்றது.


இப்பேச்சுவார்த்தையின் போது பர்மாவில் தற்போது நடைபெற்றுவரும் வன்முறைகள் குறித்து கேட்டரிந்துகொண்ட அருண்காந்த் அவர்கள் அசின்விராத்து தேரரிடம் கூறும்போது , 


இலங்கை இந்து சமூகம் பர்மாவின் பௌத்தர்களின் என்ன ஓட்டங்களை மதிப்பதாகவும் தாங்கள் எப்போதும் பர்மிய பௌத்தர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் எனினும் முஸலிம்கள் கொத்து கொத்தாக தப்பியோடிக்கொண்டிருக்கும் சூழலில் எதுவித பாவமும் செய்யாத முஸ்லிம்களின் குழந்தைகளை ஏன் கொலை செய்கின்றார்கள் என்று கேள்வியெழுப்பியதுடன் இப்படி செய்வதானது உலகளவில் பௌத்தமதத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்திற்கும் பௌத்த மத அடையாளத்துடன் நடைபெறும் படுகொலைகளுக்கும் என்ன வித்தியாசமிருக்கப்போகின்றது என வினவியதுடன் மியன்மரில் வசித்துவரும் இந்துகளைப் பற்றியும் கேட்டறிந்தார்.


இதற்கு பதிலளித்துப்பேசிய அசின் விராத்து தேரர் அவர்கள் கூறும்போது


"நீங்கள் சமூக ஊடகங்களில் பார்ப்பது முஸலிம்கள் பௌத்தர்களின் குழந்தைகளை கொலைசெய்யும் காட்சி"


எனினும் சில இடங்களில் அக்கொலைகளுக்கு பதிலடியாக மக்கள் அவ்வாரான கொலைகளை செய்திருக்கலாம்.


எது எவ்வாறெனினும் இங்குள்ள இந்துக்களின் நலன் சார்ந்து நாங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்விற்கு தாங்கள் வருகைதர வேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.



ஊடகப்பிரிவு,
ஹிண்ட்போஸ்,
கொழும்பு.


என குறிப்பிடப்பட்டுள்ளது.
madawalanews
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.