இலங்கை கிரிக்கெட் அணி மோசமான பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், இப்போதைய இளம் வீரர்களால் இலங்கை அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளமை பலரது விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.
மூத்த வீரர்களான சங்ககாரா, மஹேல ஜெயவர்த்தன ஆகிய வீரர்கள் ஓய்வு பெற்றமையே இலங்கையின் இந்த மோசமான பின்னடைவுக்களுக்கு காரணம் என்பது பலரதும் கருத்தாகும்.
இதுதொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ரசல் ஆர்னோல்ட் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இப்போதைய இலங்கை அணியில் சங்ககாரா, மஹேல ஜெயவர்த்தன ஆகியோருக்கு இணையான மாற்று வீரர்கள் யாரும் இல்லை.
அதேபோன்று டில்ஷானுக்கும் மாற்று வீரர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
வீரர்களுக்கு ஏற்படும் அதிகப்படியான உபாதைகளும் இலங்கையின் தோல்விகளுக்கு பிரதானமான காரணமாகும்.
எது எவ்வாறாயினும் உலக கிண்ணத்துக்கு இடையில் ஓராண்டு முழுமையாக உள்ள நிலையில் இலங்கை அணியால் சிறப்பாக எழுந்துவர முடியும் எனும் நம்பிக்கையையும் ஆர்னோல்ட் வெளியிட்டுள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.