கால் நூற்றாண்டில் டோனியைப் போல ஒரு வெற்றிகரமான பினிஷரைப் பார்த்ததில்லை-இலங்கையின் முன்னாள் தலைவர்..!
கடந்த கால் நூற்றாண்டில் நான் டோனியைப் போல ஒரு வெற்றிகரமான பினிஷரைப் பார்த்ததில்லை என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் இதுகுறித்துக் கூறியதாவது:
களத்தில் நேரடியாக எங்களுக்கு எதிராக ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டியில் 183 ஓட்டங்கள் எடுத்ததைப் பார்த்தேன். அவரிடம் கிரிக்கெட் ஸ்டைல் கிடையாது.ஆயினும் அவருடைய மனோவலிமை இதற்கும் மேலாக ஒரு போட்டியை கணிப்பது என்பதில் உலகில் அவருக்கு நிகர் யாரும் இல்லை என்றும் மார்வன் தெரிவித்துள்ளார்.
டோனி சூழ்நிலைக்கேற்ப ரிஸ்க் எடுத்து ஆடக்கூடியவர். கடந்த 25 ஆண்டுகளில் நான் பார்த்த வரையில் அவரைப்போல ஒரு பினிஷர் கிடையாது என்றும் மார்வன் தெரிவித்துள்ளார்.
ஜாவேத் மியாண்டட், மைக்கேல் பெவன், அர்ஜுனா ரணதுங்கா ஆகியோர் ஒருகாலகட்டத்தில் இருந்தாலும் எல்லோரும் இப்போதைய நிலையில் டோனிக்கு பின்னர்தான் என்றும் மார்வன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.