கண்டிப்பாக நாங்கள் மீண்டெழுவோம்..!'- இலங்கை அணி நம்பிக்கை

இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரில் 4 - 0 என்று முன்னிலை வகித்து வந்த இந்திய அணி, கொழும்புவில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றுஇலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது. இதனால், அந்நாட்டு ரசிகர்களும் அணியினரை இணையதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்... என்ன சொல்கிறார் கேப்டன் கோலி?

இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரில் 4 - 0 என்று முன்னிலை வகித்து வந்த இந்திய அணி, இன்று கொழும்புவில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது. மேலும், இந்தப் போட்டியில் கோலி, தனது 30-வது சதத்தை அடித்தார். 

இந்நிலையில், இலங்கை அணியின் கேப்டன் உபுல் தரங்கா, 'ஒரு கேப்டனாக இந்தத் தொடரை இப்படி இழந்தது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. கடைசி இரண்டு ஆண்டுகளாகவே நாங்கள் சரியாக விளையாடவில்லை. ஆனால், இப்போது நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மீண்டெழுந்து வருவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. இன்னும் ஒரேயொரு மாதத்தில் அடுத்த ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது. அதில் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் தோல்வியடையும் போது எங்கள் ரசிகர்கள் எங்களிடமிருந்து விலகிச் செல்கிறார்கள். ஆனால், தவறுகள் நடக்கத்தான் செய்யும். எனவே எங்கள் ரசிகர்களின் ஆதரவு இப்போதுதான் தேவைப்படுகிறது. அதுவே எங்கள் பலம்!' என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.