பெண்ணொருவர் கடைத் தெருவுக்குச் சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாக குழந்தை பெற்ற நிலையில், அக்குழந்தையையும் தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்து சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.
சீனாவின் தென் பிராந்திய நகரான யுன்ஃபுவில் பெண்ணொருவர் பழங்கள் மற்றும் மரக்கறிகளை வாங்க முற்பட்டபோது அப்பெண் நின்ற நிலையிலேயே குழந்தை பிறந்தது.
திடீரென அவரின் பனிக்குடம் உடைய, அப்பெண் வீரிட்டார். சில விநாடிகளில் குழந்தையொன்று அவரின் கால்களுக்கிடையில் விழுந்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் அம்பியூலன்ஸுக்கு அழைப்பு விடுத்ததையடுத்து, அம்பியூலன்ஸுடன் தாதியர்களும் அங்கு வந்தனர்.
அத்தாதியர்கள் தொப்புள்கொடியை துண்டிக்க உதவினர். 30,40 வயதுக்கிடைப்பட்டரென கருதப்படும் இப்பெண்ணை மேலதிக மருத்துவ சோதனைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல மருத்துவ ஊழியர்கள் முன்வந்தனர்.
எனினும், அப்பெண் அதற்கு மறுத்தார். மாறாக, தனது குழந்தையை ஒரு கையிலும் பொருட்கள் அடங்கிய பையை மறுகையிலும் ஏந்திக்கொண்டு தனது வீடு நோக்கி அவர் நடந்து சென்றார்.
jaffnamuslim

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.