இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்; அரசாங்கத்திடம் வலியுறுத்தல்


மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளையும், படுகொலைகளையும் நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிடின் வேறு வழிகளில் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் இன்று கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளையும், படுகொலைகளையும் இன்நிறுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முஸ்லிம் அமைப்புகள் பல இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் பங்கேற்றனர்.

மியன்மார் தூதரகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதோடு, முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்நத்து விடப்பட்டுள்ள வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

எஸ்.எம்.மரிக்கார் “மியன்மாரில் முன்னெடுக்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு எதிராக எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரின்போது வெளிப்படுத்த வேண்டும்.

இந்த போராட்டத்தின் ஊடாக மியன்மாரில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆங் சாங் சூகிக்கு மாத்திரமல்ல இந்த நாட்டின் தலைவர்களுக்கும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இவ்வாறான ஒரு நிலைமையே நடைபெற இருந்தது. அதனை நாம் மாற்றியமைத்தோம். ஆகவே நாட்டில் மாத்திரமல்ல உலகில் எங்கு இவ்வாறான விடயங்கள் நடைபெற்றாலும் அதற்கு எதிராக நாம் முன்நிற்க வேண்டும்.

மனித உயிர்களை படுகொலை செய்வதற்கு நாம் எப்போதும் எதிராக செயற்பட வேண்டும். இன்று நாம் தரும் தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு நாம் உங்களிடம் கேட்கின்றோம். இதனை ஏற்றுக்கொள்ளாவிடின் இதனைவிட தீவிரமானக செய்தி ஒன்றை தரவேண்டி ஏற்படும்.“

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி, ஆங் சாங் சு கிக்கு வழங்கப்பட்டுள்ள சமாதானத்திற்கான நோபல் பரிசினை மீளப்பெற வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.