மக்களை உணர்ச்சிவசப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் காலம் கடந்து விட்டது-கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்.


மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் வித்த்தில் பேசி அரசியல் செய்ய நினைத்த காலம் மலையேறி விட்டதுடன் தற்போது சிறுபான்மை சமூகம் சாணக்கியமாக செயற்பட்டு உரிமைகளை வென்றெடுக்கும் காலம் உதயமாகியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.



உத்தேச அரசியமைப்புத் திருத்த்த்தின் ஊடாக சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுத்து அவர்களுக்கு அரசியல் விடுதலையினைப் பெற்றுக்கொடுக்க எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் மிகவும் சாணக்கியமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.



மட்டக்களப்பு வந்தாறூமூலையில் பொது நூலகம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்,

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,

வெறும் சமூக மற்றும் இன ரீதியான உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களின் ஊடாக மக்களை ஏமாற்றலாம் என நினைத்து சிலர் அரசியலை முன்னெடுக்க முயல்கின்றனர்,

ஆனால் அவற்றுக்கெல்லாம் ஏமாறுவதற்கு மக்கள் இனி மேலும் தயாராக இல்லையென்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,



அவற்றையெல்லாம்’ முறியடித்து இன்று கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நல்லிணக்கத்துடன் மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை பிரதேச மற்றும் இன ரீதியான பாகுபாடின்றி சம்மாக பங்கீடுசெய்து அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது,



இன்று கிழக்கின் நிலைமைகளே தெரியாமல் சிலர் நல்லிணக்கத்தை வளர்ப்பதாக்க் கூறி இங்கு தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயல்கின்றனர்.

மாகாண சபைகள் நிதிகளை பெற்றுக் கொள்ளபடும் சிரமங்கள் மற்றும் ஒதுக்கப்படும் நிதிகள்தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் உள்ளவர்கள் அறிந்திருக்கின்றார்களா என்ற சந்தேகம்தோன்றுகின்றது,



சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் செய்வதாக கூறுபவர்கள் நிதி ஒதுக்கீடுகளில் கிழக்கு மாகாண சபை புறக்கணிக்கப்படுவதை அறிந்திருக்கவேண்டும்,

ஆகவே நாமும் எமது தனிப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடுகளில் கூட இனங்களுக்கும் பிரதேசங்களுக்கும் சம்மாக ஒதுக்கீடு செய்து அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம்,



ஆகவே இங்கு வந்து தமது தனிப்பட்ட அரசியலை முன்னெடுக்க பிளவுகளை ஏற்படுத்த முனையாமல் சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கிற்கு அதிக நிதிகளை ஒதுக்க மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து அங்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனையவேண்டும்,

இன்று நாம் தமிழ் சகோதர்ர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நாசிவன் தீவு,இழுப்பத்தடிச்சனை,களுவான்கேணி,மற்றும் வந்தாறு மூலை ஆகிய பகுதிகளில் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் வாசிகசாலை திறந்து வைத்துள்ளோம்,

ஆகவே நாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பிரதேச இன பாகுபாடின்றி அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம்,



இன்று மாகாணத்தில் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்துள்ளோம்,அதே போன்று அதிகாரிகள் மற்றும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திண அரசாங்கத்தில் அதற்கு உரிய பொறுப்பில் உள்ளவர்களை விட சிறப்பாக செயற்பட்டு வருகின்றோம்.



கடந்த காலங்களில் திட்டமிட்டு பிரிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைப்பது இலகுவான காரியமல்ல என்ற போதிலும் அவற்றை நாம் இன்று முன்னெடுத்து வருகின்றோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.