சளைக்காத சங்கா, இங்கிலாந்திலும் சரித்திரம்



ஏன் இவர் தேசிய அணியான, இலங்கை அணியிலிருந்து ஓய்வு பெற்றார் என்கின்ற கேள்வி கிரிக்கட் விமர்சகர்கள் மற்றும் இரசிகர்கள் மத்தியில் இற்றைவரை நிலவுகின்றது, காரணம் சர்வதேச கிரிக்கட்டில் ஆடும் போது, ஓய்வு பெற்ற பின்னரும் சர்வதேசமெங்கும் பேசப்பட்டுவரும் வீரர் குமார் சங்கக்கார என்றால் மிகையில்லை.

இங்கிலாந்து மண்ணில் கவுண்டிப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சங்கா, சரே அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஆடிவருகின்றார். தற்சமயம் சமர்செட் அணிக்கான போட்டியில் முதல் இனிங்ஸில் ஆடிவரும் சங்கா, ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களைப்பெற்றுள்ளார். இப்பருவகாலத்தில் 9 முதற்தரப்போட்டிகளில் 13 இனிங்ஸில் பங்குபெற்றியுள்ள சங்கா 8 சதங்கள் மற்றும் இரண்டு அரைச்சதங்களை விளாசியுள்ளார். ஆட்டமிளக்காது பெற்ற சதமானது 64வது முதற்தர சதமாகும்.

1369ஓட்டங்களை குவித்துள்ள சங்கா, 124.45 என்ற ஓட்ட சராசரியைக்கொண்டுள்ளார், லாராவிற்கு அடுத்த வீரராக இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.