முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்தும் மியன்மார் அரசைக் கண்டிக்க நல்லாட்சிக்கு மனமில்லை..



ஒரு அரசானது இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் செயற்பட வேண்டும். பல விடயங்களில்விழுந்தடித்துக்கொண்டு அறிக்கைகள்,கண்டனங்களை தெரிவிக்கும் இலங்கை அரசானது முஸ்லிம்கள்பாதிக்கப்படும் விடயமேதும் என்றால் தூர நின்று வேடிக்கை பார்ப்பது வேடிக்கையாகிவிட்டது.


பிரான்ஸில் ரஷ்யாவில் மென்ஷெஸ்டரில் ஏன் பிரஸசல்சில் நடந்த தாக்குதல்களுக்கும் இந்தியாயாத்திரிகர்கள் கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் மாறி மாறி கண்டன அறிக்கைகளைபதிவாக்கி இருந்தனர்.

மியன்மாரில் அந்த நாட்டு அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கொடூர இனவாத செயலால் பல இலட்சகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பல்லாயிரக்கணக்கானோரை மியன்மார் இராணுவம்ஈவிவிரக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக கொன்று குவித்து வருகிறது. இதற்கு பலரும் கண்டம்தெரிவித்துள்ள நிலையிலும் இலங்கை அரசு மௌனம் காத்தே வருகிறது.

அங்கு பௌத்த மதத்தின் பெயரில் இப் பயங்கரவாதம் அரங்கேறிக்கொண்டிருப்பதால் பௌத்த மக்களைபெரும்பான்மையாக கொண்டுள்ள இலங்கை அரசின் கண்டனம் கனதியான பெறுமானமுடையது. இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டே கிழக்கு மாகாண சபையில் மியன்மார் அரசின்இனவாதத்தை கண்டித்து பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 


இது தொடர்பில் பேசுமாறு மு.காவின் பா.உ தௌபீக் , மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜமீல்உள்ளிட்ட பலர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதோடு ஏனையவர்கள் இவ்வரசை பேசுமாறுவலியுறுத்தியுமுள்ளனர்.இது தொடர்பில் தமிழ் தரப்பு கூட மியன்மார் மக்களுக்கு ஆதரவளித்து கண்டனஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இருந்த போதிலும் இவ் விடயத்தை இவ்வரசுகண்டுகொள்வதாக இல்லை.

முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தும் முஸ்லிம்களின் விடயத்தை இவ்வரசு கண்டுகொள்வதாக இல்லை. கோரிக்கைகள் ஏதுமின்றியே ஓடிச் சென்று ஏனையோர் விடயத்தில் தலைபோடுகிறது. இதுவேஇவ்வரசின் உண்மையான முகமாகும். மியன்மார் அரசின் செயல்களோடு ஒத்துப் போகும்படியானநிகழ்ச்சி நிரல்களுடன் இயங்கும் இவ்வரசிடமிருந்து இதற்கு கண்டனங்களை எதிர்பார்ப்பதுஅர்த்தமற்றதுமாகும்.

அ.அஹமட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.