தம்புள்ளை சோகம்.. 4 சிறு பிள்ளைகளின் தாய் பாத்திமா ஜெஸ்மினின் ஜனாஸா பலாங்கொடையில் நல்லடக்கம்.



தம்புள்ளையில் நேற்று முன்தினம் (3) இடம் பெற்ற பஸ் வேன் கோர விபத்தில் பலியான தாயின் ஜனாசா நல்லடக்கம் நேற்று (4) அதி காலை 3 மணியளவில் பலாங்கொடை முஸ்லிம் மைய வாடியில் இடம் பெற்றது.


இவ்விபத்தில் மரணமடைந்த தாய் பாத்திமா ஜெஸ்மின் பாஹிம் (வயது 38) 4 பிள்ளை களின் தாயாவார்.

இத்தம்பதிகளின் மூத்த புதல்வி எம்.எப்.எப். இல்மா (வயது 14),
மகன் எம்.எப். எப்.இன்சாப் (வயது 10) ஆகிய இரண்டு மாணவர்களும் முறையே பலாங்கொடை இ/ ஜெயிலானி
மத்திய கல்லூரி மற்றும் பலாங் கொடை இ/அல் மினாராமுஸ்லிம் வித்தியாலயம் ஆகிய வற்றில் முறையே தரம் 10 மற்றும் 5 ஆகி யவற்றில் கல்வி கற்றுக் கொண்டி ருக்கும் மாணவர்களாவர்.


இவர்கள் இருவரும் முறையே மாத்தளை மற்றும் கண்டி அரச மருத்துவமனைகளில் அவசர சத்திரசிகிச்சை பிரிவுகளில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்கள் உட் பட இவ்விபத்தில் பாதிக்கப்பட்டு தற்போது பல வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வரும் சகலரின் தேக சுகத்திற்காக இப்பகுதி மக்களின் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

madawalanews
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.