இலங்கை அணி 2019 உலகக் கிண்ணத்தில் நேரடியாக போட்டியிடும் வாய்ப்பு மேற்கிந்தியத் தீவுகள் அணிகளின் கைகளில் தங்கியுள்ளது இவ்வாறு தான்.

இலங்கை கிரிக்கெட் அணியானது அடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட்டில் நேரடியாக தகுதி பெறுவது, தற்போது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் கைகளிலேயே தங்கியுள்ளது.

இலங்கை அணி இந்திய அணியுட னான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் , ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 4- 0 என்ற கணக்கில் இழந்துள்ளது.

இதனால், இலங்கை அணி 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறும் வாய்ப்பு சிக்கலில் உள்ளது.

தற்போது இந்திய அணியுடனான தொடரில் 4-0 என்ற கணக்கில் இலங்கை இழந்துள்ளதால் உலகக் கிண்ண நேரடி தகுதியினைப் பெற, மேற்கிந்தியத் தீவுகள் அணி தமக்கு வரும் அடுத்த ஆறு போட்டிகளில் ஒன்றில் தோல்வியடையும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

அத்துடன் , இந்த நிபந்தனையுடன் இருக்க வே ண் டுமானால், இன்று ஆர். பிரேமதாச மைதா னத்தில் நடைபெறும் போட்டியில் இந்தி யாவுடனான போட் டியில் இலங்கை வெற்றி பெற வேண்டும்.

இதில் வெற்றிபெற்றால், சர்வதேச ஒரு நாள் தரவ ரிசையில் இலங்கை அணி 88 புள்ளிகளை பெற்றுக்கொள்ளும்.

எனினும் இப்புள்ளிகள் இலங்கை அணி உலகக் கிண்ண கிரிக்கெட்டில் நேரடியாக பங்குபெறுவதை உறுதி செய்வதற்கு போதாது.

ஏனெனில், மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்ததாக அயர்லாந்துடன் ஒரு போட்டியிலும் , இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் தொடரிலும் பங்குகொள் ளவுள்ளது.

இப்போட்டிகள் அனைத் திலும் வெற்றி பெற்றால் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஒரு நாள் தரவரி சையில் 88 புள்ளிகளைப் பெறும்.

இப் புள்ளிகளை தசம் கணக்கில், மேற்கிந் திய தீவுகள் அணி இலங்கையை விட முன்னிலையில் காணப்படும். இதனால் இலங்கை அணியின் நேரடி வாய்ப்பு பறிபோகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.

மாறாக, இலங்கை அணி தொடரினை 5-0 என இந்தியாவிடம் இழந்து, இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் பெற
4-1 என கைப்பற்றினால் மாத்திரம் போதுமாக இருக்கும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.