மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தம்புள்ளை, மாத்தளை வீதியின் பன்னம்பிட்டிய பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேன் மற்றும் பஸ் ஒன்று மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களுக்கு 5 சிறுமிகள் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.
கண்டியில் இருந்து பொலனறுவை வரை பயணித்த பஸ் வண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை வேனில் சென்றவர்கள் திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.