ஒரு கால் இல்லாவிட்டாலும் விளையாடுவேன்… யாருக்கும் தெரியாத ரகசியத்தை வெளியிட்ட எம்.எஸ்.கே !!












ஒரு கால் இல்லாவிட்டாலும் விளையாடுவேன்… யாருக்கும் தெரியாத ரகசியத்தை வெளியிட்ட எம்.எஸ்.கே !!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தன்னம்பிக்கையின் மறு உருவம் என்பதை இந்திய தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.

ஜார்கண்டின் மிக எளிய குடும்பத்தில் பிறந்து தனது விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கே பெருமை சேர்த்தவர் தோனி.


இந்திய அணியை வெற்றி பாதையில் வழிநடத்திய தோனி கடந்த சில மாதங்களுக்கு முன் தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது கோஹ்லியின் தலைமையில் விளையாடி வருகிறார்.


தோனியிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்டால், தோனியின் தன்னம்பிக்கை தான் என்பதே பலரின் பதிலாக இருக்கும்.

இந்நிலையில் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு நிகழ்வை இந்திய அணியின் தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத் தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

தோனி குறித்து பிரசாத் கூறியதாவது;

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருந்த தோனிக்கு காயம் ஏற்பட்டது, சிகிச்சைக்கு பின்னரும் அவரால் நடக்க கூட முடியவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மிக முக்கியமானது என்பதால் அனைவருக்கும் தோனி விளையாடுவாரா ? மாட்டாரா ? என்ற கவலை எழுந்தது.


தேர்வாளர் என்ற முறையில் தோனியை சந்திப்பதற்காக உடனடியாக நானும் டாக்கா விரைந்தேன். தோனியின் நிலைமையை நேரில் பார்த்து அவருக்கு பதிலாக பார்தீவ் பட்டேலை விளையாட வைக்கலாம் என்று முடிவு செய்து அவரையும் டாக்க வர வைத்தோம்.

ஆனால் போட்டி நடைபெற இருந்த முதல் நாள் இரவில் நான் தோனியை அவரது அறையில் சந்திப்பதற்காக சென்றேன், ஆனால் அவர் அங்கு இல்லை, தற்செயலாக நான் கடைசி மாடிக்குச் சென்று பார்க்கையில் தோனி மிக கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தார், அப்போது கூட அவரால் நடக்க முடியவில்லை.


போட்டி நடைபெற இருந்த அன்றைய நாளில் அணி வீரர்கள் மதியம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு தோனி விளையாடுவதற்கு தயாராக இருந்தார். அவருடைய அறையில் இருந்து எனக்கு போன் செய்தார். அப்போது என்னிடம், ஏன் நீங்கள் அதிகம் கவலைப்படுகிறீர்கள்? என்று கேட்டார். அப்புறம், என்னுடைய ஒரு கால் இல்லாவிட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவேன் என்று தெரிவித்தார். விடாமுயறசிதான் தோனியின் சிறப்பம்சம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.