மெஸ்சியை வீழ்த்தி, தலைசிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ!




ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, வருடத்தின் சிறந்த வீரரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பிக்கும். இந்த வருடத்தின் தலைசிறந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார். 


கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகல் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான ரொனால்டோ -க்கு முக்கிய இடம் உண்டு. இந்த வருடம் தனது சிறப்பான ஆட்டத்தினால் ரியல் மாட்ரிட் அணியை தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்ற வைத்தார். இந்த தொடரில் மட்டும், அவர் 12 கோல் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். 

இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான மெஸ்சியும் இருந்தார். இருந்தாலும் ரொனால்டோ, மெஸ்சியை வீழ்த்தி மூன்றாவது முறையாக விருதினை வென்றார். மெஸ்சி இந்த விருதினை இரண்டு முறை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


விகடன்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.