இருவருக்கு உயிர் கொடுத்து உயிரிழந்த குழந்தை! மனதை நெகிழ வைக்கும் சம்பவம்

காலியில் மகனின் இழப்பினை அடுத்து பெற்றோர் செய்த செயற்பாடு பலரின் பாராட்டை பெற்றுள்ளது. கல்லீரல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட தனது குழந்தையின் சிகிச்சைக்காக 35 இலட்சம் ரூபாய் பணம் சேகரிக்கப்பட்டது. எனினும் சிகிச்சையின் பலனின்றி குழந்தை உயிரிழந்தள்ளது.

இந்நிலையில் அதே நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் சத்திர சிகிச்சைக்காக 35 இலட்சம் ரூபாய் பணத்தை குறித்த பெற்றோர் வழங்கியுள்ளனர்.

11 மாத குழந்தையான சந்தநெத் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரின் மருத்துவ செலவுக்காக 35 இலட்சம் ரூபாய் மக்களின் உதவியின் மூலம் பெறப்பட்டுள்ளது. எனினும் தனது மகனுக்கு பயன்பெறாத பணத்தை பிற குழந்தைகளுக்கு வழங்கி உதவியுள்ளனர்.

காலி, வெக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த W.A.தினேஷா ரங்கனி என்ற பெண்ணே இவ்வாறு உதவியுள்ளார்.

“எனது மகன் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை வைத்தியர் மூலம் அறிந்து கொண்டேன். அதற்காக 85 இலட்சம் ரூபாய் பணம் செலவாகும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லீரல் பொருத்துவதற்கான சத்திர சிகிச்சை இந்தியாவிலேயே மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் குடும்பத்தினர் சத்திர சிகிச்சைக்கு தேவையான பணத்தை சேகரித்தனர்.

பின்னர் இந்த சம்பவம் ஊடகங்களில் பிரச்சாரமாகியதனை தொடர்ந்து பணம் சேகரிக்க முடிந்தது. பின்னர் சத்திரசிகிச்சைக்கு தயாரான போது குழந்தை உயிரிழந்து விட்டது.

ராகம வைத்தியசாலையில் மகனுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் போது கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் தொடர்பில் தகவல் அறிந்து கொண்டேன்.

மகனின் சிகிச்சைக்கு 80 இலட்சம் தேவைப்பட்ட போதிலும், 35 லட்சம் ரூபாய் பணமே சேகரிக்க முடிந்தது. அதனை நாங்கள் அந்த குழந்தைகளுக்கு வழங்கிவிட்டோம். இவ்வாறான நோயினால் இனி யாரும் பாதிக்க கூடாதென்பதே எனது எதிர்பார்ப்பு என உயிரிழந்த குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.