வீரர்களை குறைகூறுவதை விட்டு கிரிக்கட் நிர்வாகத்திடம் கேள்வி கேளுங்கள்-அர்ஜுனா ஜனாதிபதிக்கு கடிதம்




வீரர்களை குறைகூறுவதை விட்டு கிரிக்கட் நிர்வாகத்திடம் கேள்வி கேளுங்கள்-அர்ஜுனா ஜனாதிபதிக்கு கடிதம்

மக்களின் கட்டளையை சிதைக்காது, கிரிக்கெட் அழிவிலிருந்து பாதுகாக்க ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டும் எனவும் கிரிக்கெட் நிர்வாகத்தை ஒரு இடைக்கால குழு அல்லது ஒரு ஆணையாளரிடம் மாற்றப்படவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்து அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதியும் பிரதமரும் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில் விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தலில் நான் மக்களின் விருப்பத்திற்கினங்கவும் கிரிக்கட்டை பாதுகாப்பதற்கும் கிரிக்கட் சபையின் உப தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன்.

ஆனால் தேர்தலில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றன. விளையாட்டு சட்டத்தின்படி சிலர் போட்டியிட முடியாது. ஆனால் எமக்குத் தெரியும் ஊழல் நிறைந்த குடும்ப பின்னனியை கொண்ட திலங்க சுமதிபால போட்டியிட்டார்.

முன்னாள் அமைச்சர்கள் திலங்க சுமதிபால அவர்களின் வேட்புமனுக்களை நிராகரித்தனர். ஆனால் தற்போதைய அமைச்சர் மிகப்பெரிய தவறை செய்துள்ளார். அதன் விளைவாக நான் கூட மனித உரிமைகள் மீறல் ஆணைக்குழுவுக்கு முறைபாடு செய்ய நேர்ந்தது.

நான் மீண்டும் தெரிவிப்பது, எல்லோரும் சேர்ந்து முக்கிய முடிவை எடுக்கவேண்டும். இது தொடர்பாகவே நான் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளேன்.

குறிப்பாக ஞாயிறு இடம்பெற்ற போட்டியின் போது ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் மோசமாக இருந்தமையானது கவலையளிக்கின்றது. குறிப்பாக வீரர்களின் மனநிலை மேசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது பற்றி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

குறிப்பாக வீரர்கள் முழுநாளும் பயிற்சிசெய்திருக்கின்றனர். மற்றும் அவர்களிடம் நேரம் கூட காணப்படவில்லை குடும்பத்துடன் இருப்பதற்கு. அப்படி இருக்கையில் தற்போது மனதளவில் உடைந்து போயுள்ளனர்.

தற்போதைய நிர்வாகம் விழிப்போடு இல்லை. அவர்கள் ஒரு முறையான நிர்வாகத்தை ஏற்படுத்தவில்லை. வீரர்களுடைய மனநிலையை மேம்படுத்த போதிய வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவில்லை. நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் ரசிகர்களுக்கு இந்திய ரசிகர்களை போல நடந்துகொள்ளவேண்டாம் என்று,. எமக்கு சிறந்த கலாச்சாரம் பாரம்பரியம் உண்டு.

வீரர்களை குறைகூறுவதை விட்டு கிரிக்கட் நிருவாகத்திடம் கேள்வி கேளுங்கள். அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்புடையவர்கள். முன்னர் இருந்த வீரர்கள் ஒரு நிலையை ஏற்படுத்தினர் ஆனால் தற்போது அடுத்த வாய்ப்பு உள்ளதா என்பது கேள்வியே.

நான் சொன்னேன் சிறந்த கிரிக்கட் வீரர்கள் தினேஸ் சந்திமல் மற்றும் லஹிரு திரிமன்ன , ஆனால் நிருவாகம் அவர்கள் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை.

தற்போது வீரர்கள் களத்திற்கு ஆடுவதற்காகப் போனால் அடுத்த போட்டியில் நாம் ஆடுவமா என்று தான் எண்ணுகின்றனர். அதனால் அவர்கள் அணிக்காக விளையாடுவதற்காக எண்ணாது தனிப்பட்ட முறையில் தான் விளையாட நேரிடும். எமது காலத்தில் அப்படியல்ல.

திரிமன்னேயை ஒருவருடத்தின் பின் விளையாட விடுகின்றனர். வீரர்களின் திறமையை எவராலும் மூடி மறைக்க முடியாது. அது எப்போதும் வெளியில் வரத்தான் எத்தனிக்கும்.


சந்திமாலுக்கு நேற்று ஏற்பட்ட உபாதை தொடர்பில் வருத்தமடைகின்றேன். யாருடைய திறமையையும் நிர்வாகத்தினால் மறைக்கமுடியாது.

40-50 வீரர்களை நாங்கள் தேசிய மட்டத்திற்கு கொண்டுவந்துள்ளோம். அரசியல் தலையீடு இல்லாமல் அவர்களில் இருந்து வீரர்கள் தெரியப்பட வேண்டும் .

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் வழங்குவதன் மூலம் மக்களின் பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன் என அமைச்சர் அர்ஜுனா ரணதுங்க இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.