லசித் மலிங்கா ஐபிஎல் போட்டியின் போது கொடுத்த பந்துவீச்சு ஆலோசனைகள் தனக்கு உதவியாக இருந்தது என இந்திய வீரர் பும்ரா கூறியுள்ளார்.
இலங்கை - இந்தியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இது குறித்து பும்ரா கூறுகையில், இலங்கையில் இதற்கு முன் நான் விளையாடாத நிலையில், சூழல் குறித்து தெரியாமல் முதல் முறையாக பந்து வீசினேன்.
இது தொடர்பாக சீனியர்களிடம் நான் கேட்ட ஆலோசனைகள் உதவியாக இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி வீரர் லசித் மலிங்கா எனக்கு நிறைய ஆலோசனைகள் கூறுவார்.
கடந்த சில ஆண்டுகளாக அவரிடம் நான் கற்றுக்கொண்ட விடயங்கள் எனக்கு பெரிதும் உதவியது.
பந்துவீச்சாளர்கள் ஏதாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
இவ்வாறு பும்ரா கூறியுள்ளார்.

அதென்னய்யா அது..தலைப்பில் #தபும்ரா ? புதுப்பேரா இருக்கே..??
ReplyDelete