உறவினர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் மரணதண்டனை கைதிகளின் குடும்பத்தினரால் வவுனியா புளியங்குளத்தில் இன்று-28- காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு வவுனியா சுந்தரபுரத்தில் கத்தியால் குத்தி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 01-06-2017 அன்று மரண தண்டனை தீர்ப்பு வழங்கியிருந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ள போதும் தங்களுக்கு சரியான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கும் மரணதண்டனை கைதிகளின் உறவுகள் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்து அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானதாக இருப்பதால் உண்ணாவிரதத்தில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என புளியங்குளம் பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அடையாள உண்ணாவிரத போராட்டத்தை இவர்கள் கைவிட்டு சென்றுள்ளனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.