பெரும் சோக சம்பவம்..

பதுளை - துன்ஹிந்த நீர் வீழ்ச்சியின் அருகாமையில் உள்ள வன பகுதியில் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில்
நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வன பகுதியிற்குள் காதல் ஜோடி ஒன்று சென்றுள்ள நிலையில், சடலம் இருப்பதனை அறிந்து உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டுள்ள நபர் கடந்த 3 ஆம் திகதி காணாமல் போன பண்டாரவளை - தென்கெபில்லேவெல பிரதேசத்தினை சேர்ந்த நபர் என அறியவந்துள்ளது.

வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள 31 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த நபரின் உறவினர்கள் சம்பவம் குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். ' குறித்த நபரின் மகனுக்கு நீரிழிவு நோய் இருந்தது. ஒவ்வொரு நாட்களும் இன்சுலின் ஏற்றப்பட்டது. இது குறித்து அவர் பெரும் மனக் கவலையுடன் இருந்தார். வேறு எந்த பிரச்சினையும் அவருக்கு இருக்க வில்லை" என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியவந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.